தோனியின் அந்த அறிவிப்பை கேட்டு கண்ணீர் விட்ட விராட் கோலி – வைரலாகும் கோலியின் பேட்டி

Kohli dhoni
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அண்மையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளிலும் இருந்தும் தனது கேப்டன் பதவியை விராட் கோலி துறந்தார். இந்நிலையில் தற்போது விராட் கோலியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

kohli

- Advertisement -

அதன்படி 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாடியது. அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடவில்லை இதன் காரணமாக அடிலெய்டு டெஸ்டில் விராட் கோலி முதல் முறையாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக விளையாடினார். அந்த போட்டியிலேயே அவர் சதம் அடித்தும் அசத்தி இருந்தார்.

இந்நிலையில் அந்த தொடரின் பாதியிலேயே தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முழுநேர கேப்டனாக கோலி மாறினார். அதன்பிறகு தற்போது வரை சுமார் எட்டு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தற்போது அந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கோலி அளித்திருந்த அந்த பேட்டியில் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தியைக் கேட்டு தான் கண்ணீர் விட்டு அழுத்ததாக விராத் கோலி கூறியிருந்தார்.

Dhoni

இதுகுறித்து அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தாவது : கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வரும் போது நிர்வாகிகள் சிலர் உங்களை டெஸ்ட் அணியின் கேப்டனாக மாற்றி இருக்கிறோம் என்று தெரிவித்தனர். அப்பொழுது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனெனில் அந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது. ஆனாலும் எனக்கு அந்த கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அப்போது அந்த தொடரை காண அங்கு அனுஷ்கா சர்மாவும் வந்திருந்தார்.

- Advertisement -

எனவே இந்த செய்தியை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோன்று தோனி ஏன் இப்படி செய்தார் என்றும் இருவரும் பேசிக் கொண்டோம். ஒருபுறம் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்க போகிறேன் அதுவும் நிரந்தரமாக என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் தோனியின் ரிட்டயர்மென்ட் வருத்தம் தந்தது இப்படி இரு வேறு உணர்ச்சிகளால் வசப்பட்ட நான் கண்ணீர் விட்டு விட்டேன் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மெகா ஏலத்துக்கு முன் 10 அணிகளும் தேர்வு செய்த வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

அவரது இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலி மற்றும் தோனி ஆகியோரது நட்பு குறித்து நாம் பல விடயங்களை பார்த்துள்ளோம். அந்த வகையில் இதுவும் அதில் ஒரு விடயம் தான். என்னதான் கிரிக்கெட் உலகில் இருந்து தோனி ஓய்வு பெற்று வெளியேறி 2 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் குறித்த செய்திகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement