ஐபிஎல் 2022 : மெகா ஏலத்துக்கு முன் 10 அணிகளும் தேர்வு செய்த வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

auction-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்காக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை மையமாகக் கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 74 போட்டிகளுடன் கூடிய 10 அணிகள் பங்குபெறும் பிரம்மாண்ட ஐபிஎல் இந்த வருடம் நடைபெற உள்ளது. அத்துடன் இந்த 2 அணிகளுக்கும் தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் சிறிய அளவில் அல்லாத மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ளது.

IPL

- Advertisement -

பிடித்த வீரர்கள்:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் 4 வீரர்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொள்ளலாம் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம் என்ற சலுகையை பிசிசிஐ வழங்கியது. அதை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் தாங்கள் விரும்பிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டு அது பற்றிய முழு அறிவிப்பை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டன.

லக்னோ மற்றும் அஹமதாபாத்:

அதை தொடர்ந்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து அதுபற்றி அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் வரும் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்துக்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அதற்கான முழு விவரத்தை வெளியிட்டு உள்ளன.

- Advertisement -

mi

ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 90 கோடிகளை செலவு செய்யலாம். இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தேர்வு செய்துள்ளது, எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளது, எவ்வளவு மீதம் உள்ளது என்ற முழுவிவரம் பற்றி பார்ப்போம்:

1. மும்பை இந்தியன்ஸ் :
ரோஹித் சர்மா : 16 கோடிகள்
ஜஸ்பிரித் பும்ரா : 12 கோடிகள்
சூரியகுமார் யாதவ் : 8 கோடிகள்
கைரன் பொல்லார்ட் : 6 கோடிகள்
(இந்த வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக ரூபாய் 48 கோடிகளுடன் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் பங்கேற்க உள்ளது.)

- Advertisement -

csk

2. சென்னை சூப்பர் கிங்ஸ் :
ரவீந்திர ஜடேஜா : 16 கோடிகள்
எம்எஸ் தோனி : 12 கோடிகள்
மொய்ன் அலி : 8 கோடிகள்
ருதுராஜ் கைக்வாட் : 6 கோடிகள்
(இந்த நட்சத்திர வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூபாய் 48 கோடிகள் மீதம் உள்ளது.)

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
ஆண்ட்ரே ரசல் : 16 கோடிகள்
வெங்கடேஷ் ஐயர் : 8 கோடிகள்
வருண் சக்கரவர்த்தி : 12 கோடிகள்
சுனில் நரேன் : 6 கோடிகள்.
(கொல்கத்தா அணி தற்போது எஞ்சியுள்ள 48 கோடிகளுடன் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளது.)

- Advertisement -

rcb

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
விராட் கோலி : 15 கோடிகள்
கிளென் மேக்ஸ்வெல் : 11 கோடிகள்
முகமது சிராஜ் : 7 கோடிகள்
(இவர்களுக்கு செலவிட்ட தொகை போக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தற்போது 53 கோடிகள் மீத தொகையாக உள்ளது.)

5. சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் :
கேன் வில்லியம்சன் : 14 கோடிகள்
உம்ரான் மாலிக் : 4 கோடிகள்
அப்துல் சமட் : 4 கோடிகள்
(ஹைதெராபாத் அணியிடம் இந்த 3 வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக மீதம் 68 கோடிகள் உள்ளன.)

dc

6. டெல்லி கேபிட்டல்ஸ் :
ரிஷப் பண்ட் : 16 கோடிகள்
அக்சர் படேல் : 12 கோடிகள்
பிரிதிவி ஷா : 8 கோடிகள்
அன்றிச் நோர்ட்ஜெ : 6.5 கோடிகள்
(டெல்லி அணியிடம் தக்க வைத்துக்கொண்ட வீரர்களுக்கு செய்த செலவுத் தொகை போக மீதம் 47.5 கோடிகள் உள்ளது.)

7. ராஜஸ்தான் ராயல்ஸ் :
சஞ்சு சாம்சன் : 14 கோடிகள்
ஜோஸ் பட்லர் : 10 கோடிகள்
யசஸ்வி ஜெய்ஸ்வால் : 4 கோடிகள்
(ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மீதம் 68 கோடிகள் உள்ளது.)

pbks

8. பஞ்சாப் கிங்ஸ்:
மயங் அகர்வால் : 14 கோடிகள்
அர்ஷிதீப் சிங் : 4 கோடிகள்
(இந்த 2 வீரர்களை மட்டும் தேர்வு செய்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 72 கோடிகள் இன்னும் மீதம் உள்ளது.)

9. லக்னோ :
கேஎல் ராகுல் : 15 கோடிகள்
மார்கஸ் ஸ்டோனிஸ் : 11 கோடிகள்
ரவி பிஸ்னோய் : 4 கோடிகள்
(புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ அணி நிர்வாகத்திடம் இன்னும் 60 கோடிகள் மீத தொகை உள்ளது.)

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : புதிய லக்னோ அணி செலக்ட் செய்த 3 வீரர்கள் இதோ! யார்யார் – எவ்ளவு கோடிகள் (முழு விவரம்)

10.அஹமதாபாத்:
ஹர்டிக் பாண்டியா : 15 கோடிகள்
ரசித் கான் : 15 கோடிகள்
சுப்மன் கில் : 7 கோடிகள்
(அஹமதாபாத் அணியிடம் 53 கோடிகள் மீத தொகையாக உள்ளது.)

Advertisement