ஐபிஎல் 2022 : புதிய லக்னோ அணி செலக்ட் செய்த 3 வீரர்கள் இதோ! யார்யார் – எவ்ளவு கோடிகள் (முழு விவரம்)

Rahul
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை மையமாகக் கொண்ட புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த புதிய 2 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முழுதாக கலைக்கப்பட்டு மெகா ஏலத்தை நடத்த ஐபிஎல் நிர்வர்கம் திட்டமிட்டது.

Rahul

- Advertisement -

நட்சத்திர வீரர்கள்:
அதில் முதல் பகுதியாக மெகா ஏலத்திற்கு முன் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்துகொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற தாங்கள் விரும்பும் வீரர்களை சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற அணிகள் தக்கவைத்து கொண்டதுடன் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

லக்னோ அணி :
இந்நிலையில் ரூபாய் 7090 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணி தாங்கள் விரும்பும் முதல் 3 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதற்கான வேலைகளில் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்ட வந்த அந்த அணி நிர்வாகம் ஐபிஎல் 2022 தொடரில் தங்கள் அணியை தலைமை தாங்கப்போகும் கேப்டனையும் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று பேசப்படும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரராக தரம் உயர்ந்துள்ள கேஎல் ராகுலை தங்களின் முதல் வீரராக லக்னோ ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இதுவரை இந்தியாவுக்காக விளையாடாத இளம் வீரரான ரவி பிஷ்னோய் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

எவ்வளவு கோடிகள்:
1. கேப்டன் கேஎல் ராகுல் : தென்ஆப்பிரிக்காவில் நாளை துவங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட உள்ளார். அந்த அளவுக்கு மவுசு கூடிய அவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனாலும் ஒருமுறைகூட பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் அழைத்துச் செல்லவில்லை.

Stoinis-2

இருப்பினும் கடந்த 2 – 3 வருடங்களாகவே தொடர்ந்து 500 ரன்களுக்கு மேல் விளாசி அதிரடியான பார்மில் உள்ள காரணத்தால் அவரை “லக்னோ அணி நிர்வாகம் அதிகபட்ச தொகையான 15 கோடிகளுக்கு” முதல் ஆளாக தேர்வு செய்துள்ளது. அத்துடன் பஞ்சாப் அணியில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் தற்போது இந்திய அணிக்காக கேப்டன்ஷிப் செய்யப்போகும் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐபிஎல் 2022 தொடரில் அவரை தங்கள் அணியின் கேப்டனாகவும் லக்னோ நியமித்துள்ளது.

- Advertisement -

2. மார்கஸ் ஸ்டோனிஸ் : கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் இந்த முறை லக்னோ அணிக்காக விளையாட ரூபாய் 11 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

bishnoi 1

3. ரவி பிஷ்னோய்:

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையில் அபாரமாக செயல்பட்ட இளம் ரவி பிஸ்னோய் கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வந்தார். கடந்த 2 வருடங்களில் வாய்ப்பு கிடைத்த அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்திய அவரை ஐபிஎல் 2022 தொடரில் விளையாட ரூபாய் 4 கோடிகளுக்கு லக்னோ அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க : தெ.ஆ மண்ணில் 2018 ஆம் ஆண்டு விராட் கோலி செய்த சாதனைகள் என்ன தெரியுமா? – வெடிச்சி செதறி இருக்காரு

மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் இந்த 3 வீரர்களுக்கு செலவு செய்துள்ள 30 கோடிகளை தவிர்த்து லக்னோ அணி நிர்வாகத்திடம் தற்போது 60 கோடிகள் மீதமுள்ளது. எனவே வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ரூபாய் 60 கோடிகள் ஏலத்தொகையுடன் லக்னோ அணி நிர்வாகம் தங்களது முழு அணியை தேர்வு செய்ய களத்தில் இறங்க உள்ளது.

Advertisement