Virat Kohli : இன்னும் இவ்வளவு ரன்களை குவித்திருக்க வேண்டும். அதுவே தோல்விக்கு காரணம் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ரன்களை குவித்தார்.

rr

- Advertisement -

பிறகு 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்து இலக்கினை அடைந்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஷ்ரேயாஸ் கோபால் 4-1-12-3 ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் கோலி : இந்த தோல்வி மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் தொடர்ந்து 4 தோல்விகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்தது. அதுவே இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், இரண்டாவதாக ராஜஸ்தான் பேட்டிங் செய்யும் போது மைதானம் ஸ்லோ ஆனது.

Virat

மொயின் அலி மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் எதிர் அணிக்கு சவாலான இலக்கினை நிர்ணயிக்க சிறப்பாக ஆடினார்கள். பந்துவீச்சில் எங்களது அணியில் பலம் இல்லை அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். வரும் போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கோலி கூறினார்.

Advertisement