தோனி என்னை வழிநடத்தவில்லை. இவரே என்னை வழி நடத்துகிறார் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்டில் தொடரில் விளையாடி வரும் கோலி அங்குள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கோலி பதிலளித்தார்.

Kohli

- Advertisement -

அப்பொழுது தன்னை வழிநடத்துபவர் பற்றி கோலி கூறியதாவது : கிரிக்கெட் எவ்வாறு எனக்கு கிடைத்ததோ அதனைப் போன்று அனுஷ்கா சர்மாவும் எனக்கு கிடைத்த ஒரு வரம் நான் ஒரு சரியான துணையை தேர்வு செய்துள்ளேன். ஏனெனில் அவர் என்னை சரியான பாதையில் வழிநடத்துகிறார். அவரிடமிருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கோலியின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது ஏனெனில் 2014 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி கேப்டன் பதவி ஏற்றார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய அணிக்காக கோலி கேப்டனாக இருந்தாலும் தோனியின் பங்களிப்பு அதில் அதிகமாக காணப்படுகிறது. பீல்டர்களை நிறுத்துவது, பவுலர்களுக்கு ஆலோசனை கொடுப்பது மற்றும் கோலிக்கும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குவது என கோலிக்கு நிறைய யோசனைகளை தோனி கொடுத்துள்ளார்.

Kohli

எனவே கோலி அனுஷ்கா சர்மாதான் தனி வழி நடத்துகிறார் என்று கூறியது தவறு என்றும் தோனியை ஒரு பேச்சுக்காகவாவது தோனியே என்னை வழி நடத்துகிறார் என்று கோலி கூறி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் மைதானத்தில் கோலியும் தோனியும் குரு சிஷ்யனாகவே இருக்கிறார்கள்.

Advertisement