இவர் இவ்ளோ சூப்பரா விளையாடுவாருனு எனக்கு தெரியாது. ஆச்சரியமா இருந்தது – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Saini

- Advertisement -

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களையும், ஐயர் 52 ரன்களையும் அடித்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த தொடரின் இரு போட்டிகளும் சிறந்த போட்டியாகும் மேலும் இவ்விரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. எங்களது தோல்வி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன்களை விட்டுக் கொடுத்ததாரல் வந்தது. இருப்பினும் கடினமான சூழ்நிலையில் ஜடேஜா மற்றும் சைனி ஆகியோர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

அதிலும் குறிப்பாக சைனி பேட்டிங் செய்த விதம் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அவர் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்று தெரியவில்லை. மேலும் கடைசி வரிசையில் இறங்கி அவர் விளையாடிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. பின்வரிசையில் இறங்கி வீரர்கள் இவ்வாறு பேட்டிங் செய்வது டாப் ஆர்டரிலும், மிடில் ஆர்டரிலும் விளையாடும் வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்று கோலி கூறினார்.

Advertisement