மனம் சொல்வதை கேளுங்கள். கனவுகளை துரத்துங்கள் உங்களை உலகிற்கு காண்பியுங்கள் – பிறந்தநாள் அன்று கோலி சிறப்பு பதிவு

Kohli

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. கோலியின் சாதனைகளை நாம் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது கிடையாது. சச்சின் படைத்த அனைத்து சாதனைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

Kohli-1

100 சதங்கள் என்னும் அசைக்க முடியாத சாதனையை அசைத்து பார்க்க இவரால் மட்டும் தான் முடியும் என்று கூறினால் அது நிச்சயம் உண்மைதான். இதுவரை 239 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 67 சதங்களை விளாசியுள்ளார். கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்சி நம்மில் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்ததே. கங்குலிக்கு அடுத்து அதே சுபாவம் உடைய கேப்டன் என்றால் அது நம் கிங் கோலி மட்டுமே.

இந்நிலையில் விராட் கோலி தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது கோலி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவு :

இந்த பதிவில் தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கைப்படங்கள் தனக்கு கற்றுத்தந்தவை குறித்து கோலி எழுதி அதனை பகிர்ந்துள்ளார். இதில் பல சுவாரசியமான விடயங்களை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். கோலியின் இந்த கடிதத்தை படித்து இதில் உங்களுக்கு பிடித்த கருத்தினை கமெண்ட் பிரிவில் பதிவிடலாம் நண்பர்களே. ” Happy Birthday King Kohli “

- Advertisement -