இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி பொதுவாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தவிர அதிகமாக வேறு யார் புகைப்படத்தையும் பதிவிடமாட்டார். இந்தியா வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் வீரர்களோடு எடுக்கும் புகைப்படத்தை பதிவிடும் கோலி தனியாக ஒரு வீரருடன் புகைப்படத்தை பதிவிடுவது மிகவும் அரிதான விடயம் ஆகும்.
அதன்படி ஏற்கனவே தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கிய கோலி தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு தருணங்களில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனை பாராட்டியுள்ளார்.
அவரின் நல்ல குணத்துக்காக பலமுறை அவரின் பல்வேறு செயல்களை சுட்டிக் காண்பித்து இவரைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கோலி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் “எங்களின் உரையாடலை நான் நேசிக்கிறேன் நல்ல மனிதன்” என்று அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Love our chats. Good man. pic.twitter.com/LOG62xQslM
— Virat Kohli (@imVkohli) May 22, 2020
ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி அங்கு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முன் அளித்த பேட்டியில் நாங்கள் நம்பர் ஒன் இடத்தை யாருக்காவது பகிர்ந்துகொள்ள விரும்பினால் அது நிச்சயம் நியூசிலாந்து அணியுடன் தான் என்றும் அவர் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் இருக்கும் நட்பு குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
மேலும் நியூசிலாந்து அணி மிகவும் அருமையான அணி அவர்களின் பக்குவம் மற்றும் வரவேற்பு எப்பொழுதும் சிறப்பாக இருக்கும். அவர்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கோலி பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.