இந்த வெற்றி திருப்தி அளிக்கவில்லை. இது நடந்தால் மட்டுமே மகிழ்ச்சி அடைவேன் – கோலி பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் இன்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய முதலில் அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

IND vs RSA

- Advertisement -

பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தென்ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் கொடுக்க நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கோலி தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது : இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் வெற்றி மகிழ்ச்சியானதாக இருந்தாலும் திருப்தி அடையவில்லை. ஏழாம் இடத்தில் இருந்து ஆரம்பித்த நாங்கள் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் முதலிடத்திற்கு முன்னேறிவந்துளோம். சகா மீண்டும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

Ind

மேலும் அஷ்வின் சிறப்பாக பந்து வீசுகிறார் மேலும் தனது கடினஉழைப்பை தர தயாராக உள்ளார். இன்று தொடர் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான போட்டிதான். ஒரு தொடரை நாங்கள் கைப்பற்றினாலும் அடுத்த போட்டியை வெற்றி பெறவே விரும்புகிறோம். 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வதே எங்களுக்கு வேண்டும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement