இறுதிப்போட்டியில் இதை மட்டும் செய்ய தவறிட்டா முதல் பந்திலேயே அவுட் ஆய்டுவீங்க – வீரர்களை எச்சரித்த விராட் கோலி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது .இந்த போட்டிக்காக இந்திய அணி நேற்று இங்கிலாந்து புறப்பட்டு இன்று சென்றடைந்தது. ஏற்கனவே மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்திற்கு பறந்த இந்திய வீரர்கள் தற்போது இங்கிலாந்து சென்று அங்கும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக கேப்டன் விராட் கோலி அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது : உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக மதிப்பு கொண்டது. இந்த இறுதிப் போட்டிக்காக நிறைய போட்டிகள் நாம் நாம் கடந்து வந்துள்ளோம். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய அணி நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி.

இந்திய அணியை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் அது மட்டுமே எனது மனதில் உள்ளது. இந்த இங்கிலாந்து தொடரின்போது நியூசிலாந்து அணிக்கு இங்கிருக்கும் சூழல் நிச்சயம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நான் நினைக்கவில்லை. இங்கிலாந்திற்கு நாங்கள் செல்வது இது முதல் முறை கிடையாது.

IND

இங்கிலாந்து கிளைமேட் எங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு உள்ள சூழலை பழகிக்கொண்டு உற்சாகமான மனநிலையில் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். அப்படி உற்சாகமின்றி களமிறங்கினால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழப்பீர்கள் அல்லது பவுலராக இருந்தால் விக்கெட் வீழ்த்த தடுமாறுவீர்கள் எல்லாமே நமது மனநிலையை பொறுத்து தான். எனவே நல்ல உற்சாகமான மனநிலையுடன் போட்டியை ரசித்து விளையாட வேண்டும் என கோலி வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.

IND

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் எல்லாம் முடிந்து விடாது. இதற்கு மேலும் நாம் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விளையாட வேண்டும் என்று வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement