இங்கிலாந்து அணிக்கெதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இவர் ஒருவரே சிறப்பாக பேட்டிங் செய்தார் – மனம்திறந்த கோலி

Kohli-4
- Advertisement -

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் சேப்பாக்கத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லி 87 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்து குடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் என இமாலய ரன் குவிப்பை வழங்கியது.

Sibley 1

- Advertisement -

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 337 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டும் ஆண்டர்சன், ஆர்சர், ஜேக் லீச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை சீக்கரமாக இழந்து வெளியேற தொடங்கினர்.

இதில் குறிப்பாக சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் தனது சாமர்த்தியமான பந்துவீச்சின் மூலம் 6 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை காலி செய்தார். இதன் மூலம் வெறும் 178 ரன்களே இங்கிலாந்து அணியால் ஸ்கோர் செய்ய முடிந்தது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் அடித்த இமாலய இலக்கின் மூலம் இந்திய அணிக்கு 420 ரன்கள் என இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
420 ரன்கள் இலக்கு என்பது சற்று கஷ்டம் தான் என்ற போதிலும் , இந்திய அணி எப்படியாவது போட்டியை டிரா செய்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி 72 ரண்களுடனும் மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் 50 ரண்களுடன் அவுட் ஆகினர்.

Eng-bess

அவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 192 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் சரியாக பந்துவீசாததே அணியின் தோல்விக்கு காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. பந்துவீச்சில் நாங்கள் அவர்களுக்கு தக்க நேரத்தில் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டோம். முதல் இன்னிங்ஸில் ஆடுகளமும் பந்துவீச்சிற்கு ஏற்ப சாதகமாக அமையவில்லை, பேட்ஸ்மேன்களுக்கே கை கொடுத்தது. இந்த வெற்றிக்கு இங்கிலாந்து அணி முழு தகுதியானது, இங்கிலாந்து அணிக்கு எங்களது வாழ்த்துக்கள்.

முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் எங்களுக்கு சிறப்பாக இருந்தது, இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் நினைத்தபடி சிறப்பாக பந்துவீசினோம், ஆனால் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். இந்திய அணியில் சுப்மன் கில்லை விட யாரும் சிறப்பாக பேட்டிங் செய்ததாக எனக்கு தெரியவில்லை. தவறுகள் என்ன என்பதை கண்டறிந்து சரி செய்து வரும் போட்டிகளில் இன்னும் கவனுத்துடன் இங்கிலாந்து அணியை கொள்வோம்” என்று தெரிவித்தார்.

gill

முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் சிறப்பாக ஆடியிருந்தும் கேப்டன் கோலி கில்லை பாராட்டியுள்ளது சற்று வித்தியாசமாக தோன்றினாலும் கில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement