ஷமி மற்றும் பும்ராவை எழுந்து நின்று பாராட்ட இதுவே காரணம் – விராட் கோலி ஓபன்டாக்

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை விரைவாக இஷந்திருந்ததால் எளிதில் விரைவாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எளிதில் தோற்றுவிடும் என்று கருதப்பட்டது.

IND 1

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரது அபார பேட்டிங் காரணமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் போது 9-வது விக்கெட் இருக்கு 89 ரன்கள் குவித்தது. இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் ஷமி 56 ரன்களையும், பும்ரா 34 ரன்களை குவித்தனர்.

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி : ஷமி மற்றும் பும்ரா ஆகியோரது பேட்டிங்கை பாராட்டி பேசியது மட்டுமின்றி அவர்களது பேட்டிங் முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் ஒன்றாக எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தது குறித்து பேசியுள்ளார்.

shami 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷமி மற்றும் பும்ரா பெவிலியனுக்கு திரும்பும்போது நாங்கள் எழுந்து நின்று வரவேற்றோம். அதற்கு காரணம் யாதெனில் போட்டி பதற்றமான சம்பவங்களை கடந்து சென்று கொண்டிருக்கையில் தங்களது பேட்டிங் மூலம் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை அவர்கள் பெற்றுத் தந்தனர். இதன் காரணமாகவே அவர்களை கௌரவிக்கும் விதமாக நாங்கள் எழுந்து நின்று கை தட்டினோம்.

shami 1

அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இருந்தார் என கோலி தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் சேர்த்த ரன்கள் விலை மதிப்பில்லாதது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement