2007 ஆம் ஆண்டு இஷாந்த் ஷர்மாவை உதைத்து எழுப்பினேன். 14 ஆண்டுகால நினைவை பகிர்ந்த – விராட் கோலி

Ishanth
- Advertisement -

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டயுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கி நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் இவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிய 10 ஆவது இந்திய வீரராக தன் பெயரை நிலை நாட்டியுள்ளார். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் எந்த வீரரும் 100 டெஸ்ட் போட்டி கிளப்பில் இல்லை.

ishanth 1

- Advertisement -

இஷாந்திற்குப் பிறகு, கேப்டன் விராட் கோலி தனது 89 டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். இந்நிலையில் கோலி தனது மாநில மற்றும் தேசிய அணி வீரரான இஷாந்த் உடனான தனது உறவைப் பற்றித் மனம் திறந்துள்ளார். கோலி மற்றும் இஷாந்த் ஆகியோர் தமிழகத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டில் முதல் தரப்போட்டியில் அறிமுகமாகினர். அதற்கு அடுத்த ஆண்டில், இஷாந்த் தனது முதல் டெஸ்டில் விளையாட சென்றார், அதே நேரத்தில் கோலி இன்னும் நான்கு ஆண்டுகள் அப்போது காத்திருக்க வேண்டியிருந்தது.

டெல்லி அணிக்காக விளையாடும்போது அவரும் இஷாந்தும் நீண்ட நேரம் அறை தோழர்களாக இருந்தனர் என்பதையும் கோலி வெளிப்படுத்தினார். பின்னர் கோலி இஷாந்த் தேசிய அணிக்கு முதன்முதலில் தேர்வான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “இஷாந்த் என்னுடன் மாநில கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நாங்கள் மாநில கிரிக்கெட், ரஞ்சி கிரிக்கெட் என நீண்ட காலமாக அறை தோழர்களாக இருந்தோம். அவர் இந்திய அணிக்காக 2007-ல் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​மதியம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார், நான் அவரை உதைத்து எழுப்ப வேண்டியிருந்தது.

Ishanth-1

மேலும் எங்களுக்கிடையில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளாக அவரது பந்துவீச்சை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று மனமார்ந்து கூறினார். மேலும் பேசிய கோலி, இஷாந்தின் நம்பமுடியாத சாதனைக்கு எனது பாராட்டுக்கள். 32 வயதான ஒரு வேகப்பந்து வீச்சாளர் தனது உடற்தகுதியைப் பராமரிப்பது மிக சவாலான விஷயமாகும். நவீன கிரிக்கெட் உலகில் தங்களது உடலை பராமரிப்பதும் , 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் பெரிய சாதனை .

- Advertisement -

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களிடையே இது மிகவும் அரிதான விஷயம்.மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் இஷாந்த்திற்கு முன்னுரிமை அளித்திருக்கலாம் என்றும் கோலி கூறினார், ஆனால் அவர் தனது முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டில தற்பொழுது கொடுத்து வருகிறார். இஷாந்தின் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில் :

Ishanth

அவர் இதுவரை டெஸ்டில் 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது தனது 300ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். இஷாந்த் இதுவரை 80 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 423 விக்கெட்டுகளை இதுவரையில் வீழ்த்தியுள்ளார்.

Advertisement