சாம்சனுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் நான் இறங்க இதுவே காரணம் – உண்மையை சொன்ன கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார்.

Pandey

- Advertisement -

அதன்பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 165 ரன்கள் அடித்து போட்டி டை ஆனது. அதிகபட்சமாக துவக்கவீரர் முன்ரோ 64 ரன்கள் குவித்தார். சைபர்ட் 57 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ரன்அவுட் ஆனார். மேலும் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை வீசிய தாகூர் சிறப்பாக வீசி போட்டியை டை ஆக்கினார். கடைசி ஓவரில் 2 ரன்அவுட்களுடன் சேர்த்து 4 விக்கெட் வீழ்ந்தது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி ராகுல் 10 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேற மீண்டும் பதட்டம் தொற்றி கொண்டது. பிறகு கோலி வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது.

Thakur

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய கேப்டன் விராட் கோலி சூப்பர் ஓவர் குறித்தும் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : முதலில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் ஆகியோர் சூப்பர் ஓவரை எதிர்கொள்ள பேட் கட்டி களமிறங்க தயாராகி விட்டார்கள். ஆனால் நான் சாம்சனை காத்திருக்க சொல்லிவிட்டு ராகுலுடன் உள்ளே வந்தேன். ஏனெனில் என்னுடைய அனுபவம் இந்த அழுத்தமான சூழ்நிலையில் தேவைப்படும் என்று நான் நினைத்தேன்.

Rahul

அடுத்ததாக சாம்சனை தயாராக இருக்கச் சொன்னேன். முதலிரண்டு பந்துகளிலும் ராகுல் சிக்ஸ், பவுண்டரி அடித்தது மிக முக்கியமானதாக இருந்தது. அதன் பிறகு நான் எனது பணியை சிறப்பாக செய்தேன் என்று நினைக்கிறேன். இவ்வளவு வருடத்தில் இதுவரை சூப்பர் ஓவர் போட்டிகளில் நான் விளையாடியதே கிடையாது. எனவே இந்த முறை சூப்பர் ஓவரில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது எனக்கு மகிழ்ச்சி என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement