என் மகள் “வாமிகா”வின் பேருக்கான அர்த்தம் இதுதான். ரசிகர்கரின் கேள்விக்கு பதிலளித்த – விராட் கோலி

anushka

நேற்று இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியின் மூலமாக தனது மகளான வமிகாவின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை தெரியப்படுத்தியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி. மேலும் அந்த ரசிகர் வைத்த ஒரு வேண்டுகோளிற்கு சரியான காரணமும் கூறி அதை நிராகரித்திருக்கிறார் கோலி. நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க, விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வருகிற ஜூன் மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்லவிருக்கிறது. இதற்கு முன்னாரகவே இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Anushka

இந்திய வீரர்களான புஹாரா, இஷாந்த் சர்மா போன்றோர் இந்த தனிமை முகாமில் எப்படி தங்களது நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பதை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார்.

- Advertisement -

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் விராட் கோலியிடம், உங்கள் மகளின் பெயரான வமிகாவிற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் அவரின் மகளின் புகைப்படத்தை காண ஆவலாக உள்ளதாகவும் எனவே ஒரே ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிடுமாறும் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி,

anushka

வமிகா என்பது துர்கை கடவுளின் மற்றொரு பெயர் என்று தெரிவித்தார். மேலும் பதில் கூறிய அவர், நானும் எனது மனைவியும் எங்கள் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகள் எப்போது சமூக வலைத்தளமென்றால் என்ன என்பதை புரிந்துகொள்கிறாளோ, அதுவரை எந்த ஒரு புகைப்படைத்தையும் நாங்கள் பதிவேற்ற மாட்டோம் என்று அந்த ரசிகரின் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ளார் விராட் கோலி.

- Advertisement -

இதற்கு முன்னாராகவே விராட் கோலி தம்பதியினர் தங்களது மகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்று ரசிகர்களிடமும், பத்திரிக்கைகளுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement