- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரெவியூ எடுக்க சொன்ன கோலி. மறுக்காமல் ஓகே சொன்ன கேப்டன் ரோஹித் – இறுதியில் நடந்தது என்ன?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டி இந்திய அணிக்கு 1000-வது போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த போட்டி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியது. சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவை விக்கெட் ரெவியூ எடுக்க சொன்ன ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்கள் எடுத்திருந்தபோது 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்நிலையில் 22-வது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ரூக்ஸ் பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பரிடம் போனது. உடனே சாஹல் அவுட் கேட்டார் ஆனால் அம்பயர் அதற்கு நாட் அவுட் கொடுத்தார். இருப்பினும் பந்து பேட்டில் பட்ட சத்தம் கேட்டதால் சாஹல் ரெவியூ எடுக்கும் படி ரோஹித் சர்மாவிடம் கூறினார்.

- Advertisement -

ஆனால் ரோகித் சமாதானம் அடையவில்லை. உடனே விராட் கோலியும் தனது பங்கிற்கு ரோஹித் சர்மாவிடம் சென்று ரெவியூ எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக ரோஹித் உடனடியாக ரெவியூ எடுத்தார். பின்னர் ரீபிளேவில் அந்த பந்து பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். விராட் கோலி ரிவ்யூ எடுக்கச் சொன்ன பந்தை ரோகித் ரெவியூ எடுத்து விக்கெட்டும் பெற்றது தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : INDvsWI : இந்தியா வெற்றி, பேட்டிங்கில் ஏமாற்றிய கோலி ஆனாலும் சச்சினை முந்தி சாதனை – விவரம் இதோ

இறுதியில் இந்த போட்டியில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணியானது 28-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -
Published by