நாங்கள் வெற்றிபெற்றாலும் இவரை நினைத்து உண்மையில் வருந்துகிறேன். வெற்றிக்கு இவரே தகுதியானவர் – கோலி நெகிழ்ச்சி

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.

Rohith

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்து அபாரமாக போராடினார்.

பிறகு சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Rahul

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது : ஒரு கட்டத்தில் ஆட்டம் அவ்வளவுதான் முடிந்தது என்று நினைத்தேன். வில்லியம்சன் பேட்டிங் செய்த விதம் மற்றும் அவர் அணியை வழிநடத்திய விதம் ஆகியவற்றிற்காக இந்த போட்டியில் நிச்சயம் அவர் வெற்றிக்கு தகுதியானவர்தான் என்று நினைக்கிறன். அவர் பேட்டிங் செய்த விதம் மற்றும் இப்படி ஒரு இன்னிங்சை ஆடி விட்டு நம் கைக்கு வெற்றி வரவில்லை என்றால் அது எந்த அளவு வருத்தத்தை ஏற்படுத்தும் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

Williamson

கேன் வில்லியம்சனுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன் என்று கோலி கூறினார். மேலும் ரோகித் சர்மா சூப்பர் ஓவரில் ஒரு சிக்சர் அடித்து விட்டால் நிச்சயம் நியூசிலாந்து பவுலர் அழுத்தம் அடைவார் என்று தெரியும் அதே போன்று ரோகித் சர்மாவும் சூப்பர் ஓவரை சிறப்பாக முடித்து வைத்தார். இந்த தொடரை 5 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற முயல்வோம். மீதமுள்ள போட்டிகளிலும் எங்களது இந்த சிறப்பான ஆட்டம் தொடரும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement