இவருடைய வேகம் மற்றும் யார்க்கர் மிரட்டுகிறது. இனி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இவர் ஆடுவார் – கோலி பாராட்டு

Kohli-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பாக பெற அதிகபட்சமாக குஷால் பெரேரா 34 ரன்கள் அடித்தார்.

toss

அதன்பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்க வீரர் ராகுல் மற்றும் தவானின் சிறப்பான துவக்கத்தால் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது அதன் பிறகு ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது வீரராக ஐயர் களம் இறங்கினார். தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கோலியும் ஐயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இறுதிகட்டத்தில் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இது ஒரு திருப்தியான போட்டியாக நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் இந்திய அணியின் பலத்தை அதிகரிக்க சில தொடர்கள் ஆகவே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Saini

இந்த போட்டியில் ரோகித் இல்லை என்றாலும் இது எங்களுக்கு போதுமான திருப்தியான வெற்றியாக உள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு நல்ல அறிகுறியாகும். நவ்தீப் சைனி ஒருநாள் போட்டிகளிலும் இருப்பது நல்லது அவருடைய தன்னம்பிக்கை டி20 போட்டிகளில் பெற்று வருகிறார். தொடர்ந்து அபாரமான வேகத்தில் பந்துவீசி வருகிறார்.

- Advertisement -

Saini-1

அவரின் பந்துவீச்சை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் பவுன்சர் மற்றும் யார்காரிலும் அசத்துகிறார். இந்திய அணிக்கு இது ஒரு நல்ல பலனாகும். இவரால் நல்ல வேகத்திலும் அதேபோன்று நல்ல உயரத்திலும் பந்துவீசும் முடிகிறது. இவருக்கு அனைத்து விதமான போட்டிகளில் இனி வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.