- Advertisement -
உலக கிரிக்கெட்

பண்ட் விளையாடமாட்டார் என்று நினைத்தால். கடைசியில் வேறுஒருவரை அணியில் இருந்து தூக்க – மாஸ் பிளான் வைத்திருக்கும் கோலி

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

இன்றைய அரையிறுதிப் போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்போது அணியில் முக்கிய ஒன்றை ட்விஸ்ட் ஒன்றை செய்ய உள்ளார் கோலி என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் தற்போது இல்லை என்பதால் பண்ட் அணியில் நீடிப்பார் என்றும் மேலும் தினேஷ் கார்த்திக் நீக்கிவிட்டு அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில் கார்த்திக் இறங்கினாலும் பேட்டிங்கில் ஏழாவது வீரராகவே ஆடுகிறார்.

இந்நிலையில் அவர் ஆடுவதை விட அவருக்கு பதிலாக 10 அவர்களை முழுவதுமாக வீசும் ஜடேஜாவை இறங்கினால் அவர் பவுலிங்கும் செய்வார் மேலும், பிறகு பேட்டிங்கும் செய்வார் என்பதால் இன்று அணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளார் கோலி. ரவீந்திர ஜடேஜாவும் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்க கோலி திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by