தோனியின் கதையை முடிவுக்கு கொண்டு வந்த கோலி. காரணம் இதுதான் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது.

Ind-vs-Wi

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 58 ரன்கள் குவித்தார். அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 65 ரன்கள் குவித்தார், கோலி 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : ரிஷப் பண்ட் இனிவரும் காலத்தில் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில் அவரை வருங்காலத்திலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவரிடம் நிறைய திறமை இருக்கின்றன அவருக்கு அழுத்தம் கொடுக்காமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருப்போம் அவர் எங்களுடன் நீண்ட தூரம் பயணிக்க அவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் கொண்டு செல்கிறோம் என்று கோலி கூறினார்.

pant 1

கோலியின் இந்த பேட்டி மூலம் தோனியை அணியில் இருந்து ஓரம்கட்டி அவருக்கு பதிலாக பண்டை நிரந்தர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக கோலி மாற்ற திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட தோனியின் இடத்தை கோலி காலி செய்ய இருக்கிறார் என்று தோன்றுகிறது.

Advertisement