வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை – காரணம் இதுதான்

Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Iyer-2

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் மூன்றுநாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 297 ரன்களை அடித்தது புஜாரா சதம் அடித்தார் ரோஹித் சர்மா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ரஹானே இந்திய அணியை வழி நடத்தினார். இதற்கு காரணம் யாதெனில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது விராட் கோலி விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

இந்த பயிற்சி போட்டி விளையாடிகாயம் பெரிதானால் அவர் டெஸ்ட் தொடரில் ஆடுவது சிக்கலாகி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் இந்த பயிற்சி போட்டியில் விளையாட மாட்டார் என்றும் நேரடியாக டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பார் என்று இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement