கோலி செய்த சொதப்பல். தோனி இருந்து இருந்தா ஜடேஜாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது – பாவங்க ஜடேஜா

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. இந்த ரன்களை குவிக்க முக்கிய காரணமாக துவக்க ஜோடியான குப்தில் மற்றும் நிகோலஸ் திகழ்ந்தனர். குப்தில் 79 ரன்களும், நிகோலஸ் 41 ரன்களும் அடித்து அசத்தினர்.

Taylor

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரரான நிக்கோலஸ் 41 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் பிளன்டல் மற்றும் குப்தில் ஆகியோர் விளையாடி விளையாடி வந்தனர். அப்போது 22 ஆவது வரை ஜடேஜா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை மார்ட்டின் குப்தில் கணிக்கத் தவறி கால் பகுதியில் வாங்கினார். உடனே அம்பயர் பந்து பேட்டில் பட்டது என்று நினைத்து அவர் அவுட் கொடுக்க மறுத்தார்.

இருப்பினும் ஜடேஜா பந்து பேட்டில் படவில்லை என்றும் பேடில் பட்டது உறுதியாகத் தெரிந்தால் ரிவியூ கேட்கும்படி கோலியிடம் முறையிட்டார். ஆனால் கோலியும் பந்து பேட்டில் தான் பட்டுவிட்டது என்று தவறாக எண்ணி ரிவியூ கேட்கவில்லை. ஆனால் ஜடேஜாவும் ராகுலுக்கு ரிவியூக்கு போலாம் என்று கூறினார்கள். ஆனால் அதனை கேட்காமல் கோலி ரிவியூ கேட்க மறுத்துவிட்டார். பின்னர் சிலர் பந்துகளுக்கு பிறகு டிவி ரீபிளேவில் பந்து காலில் மட்டும் பட்டது தெரியவந்தது.

NZ

மேலும் பந்து ஸ்டம்பிலும் அடித்ததால் நிச்சயம் ரிவியூ கேட்டிருந்தால் விக்கெட் விழுந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. ஏற்கனவே பலமுறை இதுபோல் கோலி பல டிஆர்எஸ் குளறுபடிகளை செய்துள்ளார். ஆனால் தோனி விக்கெட் கீப்பராக இருக்கும் வரை அவர் விக்கெட் ரிவியூவுக்கு போலாம் என்று கூறும் போதெல்லாம் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

Jadeja

மேலும் பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் எல்.பி ஆகிறார்கள் ? பந்து பேட்டில் பட்டதா ? இல்லையா ?போன்ற பல முடிவுகளை துல்லியமாக கணித்து ரிவியூவுக்கு செல்வார். ஆனால் அதனை கோலி செய்ய தவறி விடுவதால் விக்கெட் வாய்ப்பு பறிபோனது. ஜடேஜா மற்றும் தோனி பலமுறை சேர்ந்து பலமுறை விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement