இந்தியா முதலில் பேட்டிங். அணியில் மாற்றம் ஏதும் இல்லை. இவர்களே போதும் – டாசிற்கு பிறகு பேசிய கோலி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று ஹாமில்டன் நகரில் துவக்க உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்டு நியூசிலாந்து அணி டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்நிலையில் டாஸிற்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : நாங்களும் இந்த மைதானத்தில் முதலில் பந்து வீசவே விரும்புகிறோம். ஏனெனில் மைதானம் அருமையாக இருக்கிறது ஆனால் நமது டாஸ் நமது கண்ட்ரோலில் கிடையாது. இந்த போட்டியிலும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறோம்.

bumrah 2

இந்த போட்டியை பொறுத்தவரை அணியில் மாற்றத்திற்கான அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நமது அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த போட்டியில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் கடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அதே அணி விளையாடும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement