இந்திய அணி முதலில் பேட்டிங். அணியில் 2 அதிரடி மாற்றங்களை செய்த கேப்டன் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது லீக் போட்டியில் துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால் இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சற்று முன்பு நடைபெற்ற டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.

NZvsIND

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்றைய போட்டிக்கான அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி சூரியகுமார் யாதவிற்கு பதிலாக இஷான் கிஷனும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாடுவதாகவும் அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த காரணத்தினால் இந்த போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அணியில் இரண்டு அதிரடி மாற்றங்களை செய்து விராட் கோலி தைரியமான முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் இது இந்த போட்டிக்கு பயனளிக்குமா என்பது இந்த போட்டியின் முடிவில் தெரியவரும்.

- Advertisement -

இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) கே.எல்.ராகுல், 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ரோஹித் சர்மா, 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) வருண் சக்ரவர்த்தி, 11) பும்ரா

Advertisement