ஆஸ்திரேலியா செல்லும் உலகக்கோப்பை இந்திய அணியில் இவரும் வருவார் – கோலி கொடுத்த ஷாக்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பாக பெற அதிகபட்சமாக குஷால் பெரேரா 34 ரன்கள் அடித்தார்.

pant 2

- Advertisement -

அதன்பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்க வீரர் ராகுல் மற்றும் தவானின் சிறப்பான துவக்கத்தால் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது அதன் பிறகு ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது வீரராக ஐயர் களம் இறங்கினார். தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கோலியும் ஐயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இறுதிகட்டத்தில் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி இந்த போட்டியின் வெற்றி குறித்து குறிப்பிடுகையில் : அனைவரையும் பாராட்டி விட்டு வேகப்பந்து வீச்சாளரான சைனி குறித்து நிறையப் பேசினார். அவருடைய வேகமும் திறமையும் நிச்சயம் சிறப்பாக இருக்கிறது என்றும் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா செல்லும் உலக கோப்பை இந்திய அணியில் அவர் ஒரு சர்ப்ரைஸ் தேர்வாக இந்திய அணியில் விளையாடுவார் என்று கோலி கூறினார்.

Saini-1

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, தீபக் சஹர் என அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இருக்கின்றனர். இருப்பினும் அணியில் மற்றொரு கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக சைனியும் இடம் பெறுவார் அவரது வேகமும், பவுன்சும் ஆஸ்திரேலிய மைதானங்கள் நிச்சயம் எடுக்கும் என்பதால் அவரை அணியில் சேர்க்க கோலி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் மூன்று வடிவத்திற்கும் அவருக்கு இனி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோலி மறைமுகமாக சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement