விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து இறங்கி வர இதுவே காரணம் – முழுவிவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படவும் இருக்கிறார் என்பதை அறிவித்தார்.

இந்நிலையில் விராட் கோலி இப்படி டி20 கிரிக்கெட்டில் தனது கேப்டன் பதவியை துறக்க என்ன காரணம் ? என்பது குறித்த கேள்வியே தற்போது அதிகளவு எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் அதற்கான தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணிக்காக விளையாடியது மட்டுமின்றி கேப்டனாகவும் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணத்தில் எனக்கு சப்போர்ட் செய்த வீரர்கள், நிர்வாகிகள், செலக்ஷன் கமிட்டி மற்றும் எனது பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நன்றி.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்திய அணி ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிய ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் நன்றி. நான் கடந்த 8-9 ஆண்டுகளாக 3 விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். அதுமட்டுமின்றி ஐந்து முதல் ஆறு வருடங்களாக கேப்டன்சி செய்து வருகிறேன். இதனால் பணிச்சுமை காரணமாக ஏதாவது ஒரு வடிவத்திலிருந்து கேப்டன் பதவியை துறக்க நினைத்தேன்.

அதன்படி தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டி இந்த டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். இருப்பினும் நான் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் தருவேன். இந்த முடிவை எடுக்க எனக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. நீண்ட யோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்கு நெருக்கமாக இருந்த ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித்துடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.

Shastri

அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நான் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன் இது குறித்து ஏற்கனவே பிசிசிஐ பொருளாளர் மற்றும் தலைவர் கங்குலி ஆகியோரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்து உள்ளேன். தொடர்ந்து இந்திய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் என விராட் கோலி டி20 பதவியை ராஜினாமா செய்தது குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement