கோலியை தொடர்ந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் மற்றொரு இந்திய வீரர் ! யார் தெரியுமா ?

virat
- Advertisement -

ஜீன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுண்டி போட்டிகளில் விளையாட ஏற்கனவே சில இந்திய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான வருண் ஆரணும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

kolhi

- Advertisement -

வருண் நாயர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுண்டி தொடரில் லைகெஸ்டஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஷோயில் கான் தான் அந்த அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த வருண் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

varun-aaron

இதுகுறித்து பேசிய அந்த அணியின் மூத்த பயிற்சியாளரான பால் நிக்சன் “வருண் தேர்வு செய்யப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.ஏற்கனவே கவுண்டி அணியில் வருண் இல்லாமல் ஹர்பஜன்சிங்,அஸ்வின் மற்றும் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement