தோனி வழியை பின்பற்றிய விராட் கோலி..! – வைரலாகும் வீடியோ

virat
Advertisement

ஹெலிகாப்டர் ஷாட் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது தோனி மட்டும் தான். ஆனால், சமீப காலமாக தோனியிடம் இருந்து இந்த ஷாட்டை பார்க்க முடியாதது ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த குறையை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி நிறைவேற்றியுள்ளார்.
dhonispartan
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மீண்டும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இம்முறை அந்த ஷாட்டை அடித்தது தோனி அல்ல தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி தான்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது போட்டியின் 14வது ஓவரை பிளன்கெட் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர் கொண்ட கோலி, ஆஃப் திசையில் விலக்கி வீசப்பட்ட அந்த பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement