இன்னும் பழைய கதையே பேசாதீங்க. இனிமே பாருங்க என்ன நடக்குதுன்னு – கோலி ஆவேசம்

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி தோற்றதை எடுத்து இந்தியனின் மீதும், கேப்டன் கோலி மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக இந்திய அணி புறப்பட்டு அமெரிக்கா சென்றது.

- Advertisement -

இந்திய அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணியில் தற்போது சுமூகமான சூழ்நிலை இல்லாத வேளையில் இந்தியாவில் விராட் கோலி பேட்டி அளிப்பதை புறக்கணித்தார். தற்போது தொடருக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் நான்காவது ஆட்டக்காரர் குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி கூறியதாவது : உலக கோப்பை தொடர் முடிந்ததில் இருந்து இந்த கேள்வி அணியை தொடர்ந்து வருகிறது. நான்காவது வீரருக்கான இடம் இந்திய அணியில் இருந்ததை ஒத்துக்கொள்கிறேன்.

india

ஆனால் நாட்கள் கடந்து விட்டன. உலகக்கோப்பை தொடரும் முடிந்து விட்டது. இனி மேலும் அதைப் பற்றி தொடர்ந்து கேட்க வேண்டாம். இனி வரும் போட்டிகளில் அதை நாங்கள் வெளிப்படுத்தி காட்டுகிறோம். முடிந்தவற்றை பற்றி பேச வேண்டாம் இனி வருவதைப் பாருங்கள் என்று பத்திரிகையாளரிடம் காட்டமாக கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement