மே.இ அணிக்கு எதிரான டி20 கோப்பையை வாங்கியதும் கோலி அதை யாரிடம் கொடுத்திருக்கிறார் – பாருங்கள்

Cup

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

போட்டியின் முடிவில் இந்த தொடருக்கான வெற்றிக் கோப்பை இந்திய அணி கேப்டன் கோலிக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியிடம் இருந்து ஒரு செயல் தொடர்ச்சியாக இந்திய அணியில் நடைபெற்று வருகிறது. அது யாதெனில் இந்திய அணி தொடரின் ஏதேனும் ஒரு கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் அணியில் புதிதாக ஒரு வீரர் யாரேனும் அறிமுகம் ஆகி இருந்தால் அவர்களே வெற்றி கோப்பையை கையில் ஏந்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்கள்.

அதனை போன்று பல முறை தோனி கோப்பையை இளம் வீரர்களை வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். மேலும் அந்த பழக்கத்தை அப்படியே பின் தொடர்ந்து வரும் கோலி அறிமுக வீரர்கள் யாரேனும் அணியில் இருந்தால் அவர்களிடமே கோப்பையை கொடுத்து போஸ் கொடுக்க சொல்வார். கடந்தமுறை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது துபே அறிமுகமானதால் அவரிடம் வெற்றிக்கோப்பையை கொடுத்து போஸ் கொடுக்கச் சொன்னார் கோலி.

cup 1

அதற்கு முன் டெஸ்ட் தொடரில் கே.எஸ் பரத் என்ற வீரர் அணியில் இணைந்ததால் அவரிடம் கொடுத்து கோப்பையை போஸ் கொடுக்க சொன்னார். அதை தொடர்ந்து தற்போது டி20 அணியில் இடம் கிடைத்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளம் வீரரான சஞ்சு சாம்சனிடம் இந்த இந்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான கோப்பையை கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடும் படியும் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படியும் கோலி கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -