இதுதான் லாஸ்ட் சேன்ஸ். இதை நல்லா யூஸ் பண்ணிக்கோ. இளம்வீரருக்கு வார்னிங் கலந்த – அட்வைஸ் கொடுத்த கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்க உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக தற்போது இந்த இங்கிலாந்து தொடரில் அதிக அளவு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதில் முதல் மாற்றமாக காயம் காரணமாக கில் வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக யார் விளையாடுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கடுத்து சீனியர் வீரர் புஜாரா கடந்த சில தொடர்களாக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி 3-வது இடத்தில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக விராட் கோலி 3-வது இடத்தில் களம் இறங்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் 5 ஆவது வீரராக ராகுலை இணைக்கும் திட்டத்தை கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வைத்துள்ளதாக தெரிகிறது. ராகுல் தொடக்க வீரராக இங்கிலாந்து தொடருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மிடில் ஆர்டரில் ஆர்டரில் அவரை விளையாட வைக்க அணி நிர்வாகத்திற்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது.

Rahul

இருப்பினும் ராகுலின் மீது நம்பிக்கை வைத்து கோலி தற்போது இந்த வாய்ப்பினை வழங்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் போது டீம் மீட்டிங்கில் ராகுலிடம் சில கண்டிப்பான அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் உங்களுக்கு இடம் வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

kl rahul murali vijay

மேலும் அதனை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்று வீரர்கள் முன்னிலையில் ராகுலை கோலி எச்சரித்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ராகுல் தன்னை நிரூபித்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement