அறிமுக போட்டியிலேயே அசத்திய கொல்கத்தா வீரருக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த கோலி

Venkatesh-Iyer-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 31வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் என்கிற 27 பந்துகளை சந்தித்த நிலையில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் என்று 41 ரன்களை குவித்து அசத்தினார். மேலும் முதல் விக்கெட்டுக்கு கில்லுடன் இணைந்து 82 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி அடித்து அட்டகாசமாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இலக்கு சிறியதாக இருந்தாலும் இதுவரை கொல்கத்தா அணிக்கு சரியான ஓப்பனர்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது 26 வயதான மத்திய பிரதேசத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் கிடைத்துள்ளது கொல்கத்தா அணிக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு இவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நேற்று போட்டியை கொண்டு சென்றிருந்தார். இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வெங்கடேஷ் ஐயரை பவுண்டரி லைனுக்கு அருகில் சந்தித்து அவரது பேட்டிங்கில் செய்யக்கூடிய மாற்றம் குறித்து சில டிப்ஸ்களை வழங்கினார்.

இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பெங்களூரு அணியானது 92 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது.

அதன்பிறகு கொல்கத்தா அணி வெறும் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டாம் பாதியில் தங்களது முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement