என் மனதை உடைத்து விட்டீர்கள். இருந்தாலும் ஐ லவ் யூ ஏ.பி.டி – உருக்கமாக விடைகொடுத்த விராட் கோலி

ABD

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அதிரடி வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி டிவில்லியர்ஸ்-க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை தன்பக்கம் ஏபி டிவில்லியர்ஸ் வைத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த அவர் அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெற்று வந்த டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

abd

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் இன்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிக்கையில் : என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாடினேன். இப்போது எனக்கு 37 வயதாகிறது. முன்புபோல் எந்தச் சுடரும் இப்போது பிரகாசமாக தெரிவதில்லை. இந்த நிதர்சனத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். எனவே என்னுடைய ஓய்வு முடிவை தற்போது நான் எடுத்து இருக்கிறேன். நான் விளையாடிய அனைத்து அணியில் இருந்த வீரர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள் என அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் டிவில்லியர்ஸின் இந்த ஓய்வு செய்தியை கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் டிவில்லியர்ஸுக்கு பிரியாவிடை செய்தி ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து விராட் கோலி பதிவிட்டதாவது : உங்கள் ஓய்வு என் இதயத்தை புண்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ் தான்.

இதையும் படிங்க : எதிர்பார்த்தபடி இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்த ரோஹித் – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். நமது பந்தம் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. இது தொடரும். ஐ லவ் யூ டிவில்லியர்ஸ் என விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

Advertisement