எதிர்பார்த்தபடி இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்த ரோஹித் – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்

INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1 க்கு 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியுள்ளது.

INDvsNZ 1

இந்த போட்டியில் சற்று முன் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி டாசில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய அவர் : இந்திய அணியின் அறிமுக வீரராக ஹர்ஷல் படேல் விளையாடுவதாக அறிவித்தார்.

- Advertisement -

கடந்த முதல் போட்டியின்போது காயம் ஏற்பட்ட முகமத் சிராஜ் அணியில் இருந்து விலகி உள்ளதால் ஹர்ஷல் படேல் இன்று இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்ற ஹர்ஷல் பட்டேலுக்கு இது இந்திய அணிக்காக விளையாடும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Harshal

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சூர்யகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) அக்சர் பட்டேல், 8) அஷ்வின், 9) ஹர்ஷல் படேல், 10) புவனேஷ்வர் குமார், 11) தீபக் சாகர்

Advertisement