என்ன ரூல்ஸ் இது ? என் இத்தனை வருட கிரிக்கெட்டில் நான் இப்படி பார்த்ததே கிடையாது – பொங்கி எழுந்த கோலி

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் நேற்று ஜடேஜா ரன் அவுட் ஆன விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா ரன்அவுட் ஆனாலும் களத்தில் இருந்த அம்பயர் உடனே அவுட் கொடுக்கவில்லை. பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட கட்சியில் ஜடேஜா ரன்அவுட் தான் என்று தெரிந்த பின்னர் சிறிது நேரம் கழித்து அம்பயர் மூன்றாவது அவரை அழைத்து ரன்அவுட்டை சோதனை செய்ய சொன்னார்.

ஆனால் முறைப்படி வீரர்கள் அவுட் கேட்டு இருந்தால் உடனேயே அவுட் கொடுத்திருக்க வேண்டும். இல்லையெனில் யாதெனில் சந்தேகமிருப்பின் மூன்றாவது அம்பயரை அழைத்திருக்கவேண்டும். ஆனால் அதை விடுத்து நேரம் கடத்தி அவர் மூன்றாவது அம்பயரை ரன்அவுட்டை சோதிக்க அழைத்தது தற்போது சர்ச்சையை உண்டாகியது.

Jadeja 1

இந்நிலையில் இந்த சர்ச்சையான ரன்அவுட் குறித்து போட்டியின் முடிவில் பேசிய கோலி கூறியதாவது : போட்டியின் போது ஜடேஜாவின் ரன்அவுட்டை அம்பயர்கள் நேரடியாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வெளியில் இருக்கும் அம்பயர் களத்தில் இருக்கும் அம்பயர் அழைக்காமல் அதனை பரிசோதித்து அவுட் கொடுத்தது சரி இல்லை என்று கூறினார். மேலும் இதுபோன்ற விடயத்தை நான் எப்போதும் கிரிக்கெட்டில் கண்டதில்லை.

இதுபோன்ற ஒரு விதிமுறை இருக்கிறதா என்பதனை கூட நான் கேள்விப்பட்டதே கிடையாது. மைதானத்தில் நடக்கும் விடயங்களை முதலில் அங்கு இருக்கும் அம்பயர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெளியில் இருப்பவர்கள் சொல்லி முடிவுகளை மேற்கொள்ள கூடாது இது போன்று முடிவுகள் தவறானது என்று கோலி ஆதங்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement