- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டிராவல் மட்டுமல்ல உணவு விடயத்திலும் கை வைத்த பி.சி.சி.ஐ – விராட் கோலி எடுத்த சூப்பர் முடிவு

அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பிசிசிஐ-க்கு பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. இதன் காரணமாக பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அணிக்கு விதித்திருந்தது.

உணவு விடயத்தில் விராட் கோலி எடுத்துள்ள புதிய முடிவு :

அந்த வகையில் இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடுகளில் வீரர்கள் வெளிநாட்டு தொடருக்காக பயணிக்கும் போது குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது, தங்களுக்கு என அதிக உடைமைகளையோ, தனியாக சமையல் கலைஞர்களையோ அழைத்து வரக்கூடாது என்ற பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

தற்போது உடற்தகுதிக்கு பலரும் முக்கியத்துவம் அளித்து வருவதால் தங்களுக்கு என தனி உணவு அதை ஏற்பாடு செய்ய தனி சமையல் கலைஞர்கள் என பிரத்யேகமாக ஒரு அமைப்பை வைத்திருந்த வேளையில் இனி இந்திய வீரர்களுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உணவுகளை தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக உனக்கென சமையல் ஆட்களை வைத்திருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்காக புது முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தனக்கென பிரத்தியேகமாக சமையல் கலைஞர்களை அழைத்து வராமல் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க சொல்லி அதனை இந்த தொடர் முழுவதும் டெலிவரி செய்யும் வகையில் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : இனி என்ன நடந்தாலும் ரோஹித்திற்கு வாய்ப்பில்லை.. முக்கிய முடிவை எடுத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

அவரது அந்த கோரிக்கையை ஏற்ற ஹோட்டல் நிர்வாகமும் அவருக்கு உணவினை சரியான முறையில் டெலிவரி செய்து வருகிறது. இப்படி பிரத்தியேக உணவு கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை தொடர்ந்து விராட் கோலி எடுத்துள்ள இந்த புதிய முடிவு அணி நிர்வாகத்திற்கும் பிரச்சினையை ஏற்படுத்தாதால் இது ஒரு சரியான தீர்வாகவே உள்ளது.

- Advertisement -