இனி என்ன நடந்தாலும் ரோஹித்திற்கு வாய்ப்பில்லை.. முக்கிய முடிவை எடுத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் தவறவிட்டது. இதன் காரணமாக உலக பெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இம்முறை இழந்தது.

ரோஹித் சர்மா குறித்த முக்கிய முடிவை கையிலெடுத்த பி.சி.சி.ஐ :

ஏற்கனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்த இந்திய அணி இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சி இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கும் வேளையில் இந்திய அணியானது அடுத்ததாக ஜூன் ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் தற்போது 37 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்பதனால் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கேப்டன் பதிவிலிருந்து நீக்குவதோடு மட்டுமின்றி அவரை மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப் போவதில்லை என்று முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணிக்குள் இருக்கும் இந்த கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும்.. அது நடக்கனும் – ரவிச்சந்திரன் அஷ்வின்

அவருக்கு பதிலாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் அவரது தலைமையிலேயே இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சுழற்சியில் விளையாடும் என்ற முடிவையும் இந்திய அணியின் நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement