டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையினை தொடர்ந்து டி20 யிலும் முன்னேற்றம் கண்ட கோலி – ஐ.சி.சி வெளியீடு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி நேற்று டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்கள் 3 பேர் டாப் 10 ல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கோலி டி20 தரவரிசை பட்டியலில் மட்டும் டாப் 10 வரிசையில் நீண்ட காலமாக இடம்பெறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் 94 ரன்கள் மற்றும் இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 70 ரன்கள் என தனது சிறப்பான ஆட்டத்தை காண்பித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் கோலி.

இந்த காரணத்தினால் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி ஐந்து இடங்கள் தற்போது முன்னேறி 685 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் டெஸ்ட் ஒருநாள் டி20 ஆகிய மூன்று பிரிவுகளிலும் சராசரியாக 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli-2

இதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர் ராகுல் 734 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 686 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர்அசாம் 819 புள்ளிகளுடன் உள்ளார். இரண்டாவதாக ஆஸ்திரேலிய வீரர் பின்ச் இருக்கிறார். டாப் 10 ல் இந்திய வீரர்களான ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement