நெறைய சேன்ஞ் இருக்குனு பாத்தா கோலி இப்படி பண்ணிட்டாரு – இதுல என்ன திட்டம் இருக்கும்

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியை அபாரமாக வீழ்த்திய இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்னும் சிறிது நேரத்தில் சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால் மூன்றாவது போட்டியான இன்று அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

Nattu

- Advertisement -

மேலும் முதல் 2 போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு பதிலாக அணியில் புதிதாக சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த தொடரில் இந்திய அணிக்காக இதுவரை விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் சைனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அதுபோக மணிஷ் பாண்டே, அகர்வால் ஆகியோர் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களும் இன்றைய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ராவிற்கும், ஷமிக்கும் கூட இடம் இல்லை கடைசி t20 போட்டியில் விளையாடிய அதே அணியை கோலி தேர்வு செய்துள்ளார் சற்று நேரத்திற்கு முன் நடைபெற்ற டாஸ் நிகழ்வின்போது டாஸ் ஜெயித்த கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். மேலும் அதன் பிறகு அணி வீரர்களின் தேர்வு குறித்து பேசிய கோலி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியை வைத்து இந்த போட்டியில் விளையாட உள்ளோம் எந்தவித மாற்றமும் இல்லை என அதிரடியாக அறிவித்தார்.

INDvsAUS

இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யவே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் பந்து வீச்சில் அசத்தி வரும் தமிழக வீரர் நடராஜன் இன்றும் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

pandya

மேலும் தற்போது இந்திய அணியின் ஃபினிஷராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஹர்டிக் பண்டியா இந்தப் போட்டியிலும் அதிரடி காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எது எப்படியோ இந்த போட்டியை வென்று ஆஸ்திரேலிய அணி ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement