யார் என்ன சொன்னாலும் அவர் ஆடுவாரு. அதுல சந்தேகமே இல்ல – உறுதி செய்த கேப்டன் கோலி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4 தேதி நாட்டிங்காம் நகரில் நடைபெற உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே பயிற்சியை முடித்துள்ள நிலையில் தற்போது முதல் போட்டியில் களமிறங்க தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மீது கடந்த பல மாதங்களாகவே ஒரு விமர்சனம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

kohli 1

- Advertisement -

இந்திய அணியின் மூன்றாம் நிலை வீரராக களமிறங்கும் புஜாரா நிறைய பந்துகளை வீணடித்து அணிக்கு பிரஷரை அதிக படுத்துகிறார் என்றும் எதிர் முனையில் இருக்கும் வீரர்கள் அவரால் ரன்களை குவிக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி புஜாரா கடைசியாக 2019ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

அதனை தொடர்ந்து அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இருப்பினும் 9 அரைசதங்களை அடித்துள்ள அவர் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தாலும் அவருடைய பொறுமையான ஆட்டமும், பெரிய இன்னிங்ஸ் கிடைக்காததும் கருத்தில் கொண்டு அவரை வெளியேற்றும் படி பல கருத்துக்கள் அவர் மீது எழுந்துள்ளன. மேலும் அவருக்கு பதிலாக கோலி முன்சென்று ஆடலாம் என்றும் மிடில் ஆர்டரில் வேறு ஒரு வீரரை சேர்க்கலாம் என்ற பேச்சுக்களும் இருந்துவந்தன.

pujara 1

இந்நிலையில் அவரின் மீது இருக்கும் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி தற்போது கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு புஜாரா எப்போதும் கவனம் எடுத்துக்கொள்ள மாட்டார். அந்த விமர்சனங்கள் தேவையற்றது என்று எண்ணி மீண்டும் விளையாடவே கவனமாக இருப்பார்.

Pujara-1

முடிவில் விமர்சனங்கள் எல்லாம் ஒரு வார்த்தையாக கருதி நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று கோலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்டாயம் இங்கிலாந்து தொடரில் புஜாரா விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement