முதல் டி20 போட்டி : இந்திய அணியின் துவக்க வீரர்களாக இந்த இருவரே களமிறங்குவார்கள் – கோலி பேட்டி

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மார்ச் 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளுமே அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

INDvsENG

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் முக்கியமாக இந்திய அணியின் துவக்க வீரர்களாக இந்த தொடரில் களமிறங்கப்போவது யார் ? என்ற கேள்விக்கும் விராட் கோலி தனது பதிலளித்திருந்தார்.

இந்திய அணியில் தற்போது துவக்க வீரர்களாக 3 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ளனர். இதில் எந்த இருவர் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி பேசுகையில் :

Rohith-2

இந்த டி20 போட்டியில் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர்தான் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். தவான் மூன்றாவது துவக்க வீரராக அணியில் நீடிப்பார் என்று தெளிவான விளக்கத்தை கோலி கொடுத்துள்ளார். இதன்மூலம் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

Rohith-4

மேலும் கோலிக்கு அடுத்து நான்காவது இடத்தில் யார் இறங்குவார்கள் ? என்பது தற்போது கேள்வியாக மாறி உள்ளது. ஏனெனில் அந்த இடத்தில் அறிமுக வீரரான சூரியகுமார் களமிறங்குவாரா ? அல்லது மூன்றாவது வீரராக தவானை இறக்கி கோலி 4-வது இடத்தில் விளையாடுவாரா என்பது போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இவை அனைத்திற்கும் பதில் நாளைய போட்டியில் நாம் தெரிந்து கொள்ளலாம்.