முதல் டி20 போட்டி : தவறான அணியை தேர்வு செய்த கோலி. இவரை ஏன் சேக்கல – ரசிகர்கள் அதிருப்தி

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியிருந்தார்.

INDvsENG

ஆனால் இன்று என்ன நினைத்தாரோ என்பது தெரியவில்லை. ரோஹித்தை அணியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக தவானை தொடக்க வீரராக ராகுலுடன் களம் இறக்கி உள்ளார். மேலும் இதைத்தவிர இந்திய அணியில் பெரிய மாற்றம் இல்லை. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திவாதியா என யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் 5 மற்றும் 6 இடத்தில் விளையாடுகின்றனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக சுந்தர், அக்சர் படேல், சாஹல் ஆகிய 3 பேரும், வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் தற்போது பெரிய கேள்வி எழுந்து வருகின்றது.

Rohith

ஏனெனில் தற்போது அனைத்து பார்மெட்களிலும் சிறந்த துவக்க வீரராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித்திற்கு இந்த போட்டியில் ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஏன் தவானை தேர்வு செய்தார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த வகையிலேயே இன்றைய போட்டியிலும் இந்திய அணி அடுத்தடுத்து தற்போது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

- Advertisement -

Rohith

இரண்டாவது ஓவரில் போது ஒரு ரன் எடுத்த நிலையில் ராகுலும், மூன்றாவது ஓவரில் போது ரன் எடுக்காமல் கோலியும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதுமட்டுமின்றி தவான் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் ரோஹித்தை சேர்க்காதது ஏன் என்ற கேள்விதான் தற்போது சமூக வலைதளம் மூலமாக பலமாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.