கடந்த 10 ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் சாதனையை ஊதி தள்ளிய கோலி – சாதனை இதோ

Kohli
- Advertisement -

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 99 பந்துகளுக்கு 114 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து, தொடரையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கோலி கைப்பற்றினார்.

Kohli

- Advertisement -

நேற்றைய போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளில் 20018 ரன்கள் குவித்துள்ளார். இது மிகப் பெரிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ரிக்கி பாண்டிங் 10 ஆண்டுகளில் 18962 ரன்களை அடித்து சாதனையாக இருந்தது இந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய அணி சார்பாக 10 ஆண்டுகளில் சச்சின் 15962 ரன்கள் குவித்துள்ளார் அந்த சாதனையும் கோலி தற்போது முறியடித்துள்ளார்.

Advertisement