டிராவிட் சாதனையை கடந்து சேவாக்கின் சாதனையை நெருங்கிய விராட் கோலி – விவரம் இதோ

Dravid-and-Kohli
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அங்கு நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்த கையோடு தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரரான விராத் கோலி மீண்டும் இணைந்துள்ளதால் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் விராட் கோலி தென்னாப்பிரிக்க மண்ணில் சில சாதனைகளையும் படைக்க காத்திருப்பதால் அவரது ஆட்டம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டு இருந்தது.

அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது சில குறிப்பிட்ட சாதனைகளை விராட் கோலி படைக்க வாய்ப்பு இருந்தது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 1236 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் விராட் கோலி அடித்த 38 ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரராக இருந்த டிராவிடை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்சிலோ அல்லது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலே விராட் கோலி மேலும் 32 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சேவாக்கையும் விராட் கோலி பின்னுக்கு தள்ளும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : அவர் மட்டும் முதல் டெஸ்டில் இருந்திருந்தா.. இந்தியாவின் கதையே வேற மாதிரி இருந்திருக்கும்.. கவாஸ்கர் ஆதங்கம்

இந்திய வீரராக இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1741 ரன்கள் குவித்துள்ளார். இதனைத் தாண்ட இன்னும் விராட் கோலிக்கு கிட்டத்தட்ட 500 ரன்கள் வரை மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement