தல தோனியா ? கிங் கோலியா ? டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் பெஸ்ட் கேப்டன் தெரியுமா ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ashwin 1

- Advertisement -

இந்நிலையில் கேப்டனாக கோலி செய்த சாதனைகளையும் தோனி செய்த சாதனைகளையும் பற்றிய ஒரு புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கோலியின் தலைமையில் இந்திய அணி தனது மிகப்பெரிய மூன்றாவது வெற்றியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை மற்றும் மும்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் சில ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்து தற்போது 203 ரன்கள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இது தவிர டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேப்டன் என்ற பெருமையையும் தற்போது தோனியிடம் இருந்து கோலி பறித்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் கோலி தற்போது 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று அதில் 29 வெற்றிகளை பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

Kohli

இதற்கு முன்னதாக இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் தோனி 27 போட்டிகள், கங்குலி 21 போட்டிகளில், அசாருதீன் 14 போட்டிகள் என்ற கணக்கில் அடுத்தடுத்து உள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் அந்தப் பதவியை கோலி ஏற்றுக்கொண்டார். இந்த ஐந்து ஆண்டுகளில் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக அவர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement