டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் மிகப்பெரிய சாதனையை அசால்ட்டாக காலி செய்த கோலி – என்ன தெரியுமா ?

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான மஹேந்திர சிங் தோனி உலகிலயே மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஒரு நாள் மற்றும் டி20 உலக கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஷிப் ட்ராபி என்று ஐசிசி நடத்திய தொடர்களில் எல்லாம் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி, ஒரு முறைகூட இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை கைப்பற்றி தரவில்லை என்றாலும் அவர், மஹேந்திர சிங் தோனியின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டு வருகிறார்.

Kohli

- Advertisement -

அதன் வரிசையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டதால் தோனியின் மற்றொரு சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோஹ்லி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை செயல்பட்டவர் என்ற மஹேந்திர சிங் தோணியின் சதனையை இதற்கு முன்னராக சமன் செய்திருந்த விராட் கோஹ்லி, இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அச்சாதனையை முறியடித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, அதில் 60 முறை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இந்த இறுதிப் போட்டியானது, ஒரு கேப்டனாக விராட் கோஹ்லிக்கு 61வது போட்டியாக அமைந்திருக்கிறது. எனவே இந்திய அணியின் கேப்டனாக தோனியை விட விராட் கோஹ்லி ஒரு போட்டியில் அதிகமாக செயல்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அதிக முறை வெற்றிபெற வைத்த கேப்டன் என்ற தோனியின் மற்றொரு சாதனையை ஏற்கனவே விராட் கோஹ்லி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை செயல்பட்டவர்கள் பட்டியலில், விராட் கோஹ்லி (61 போட்டிகள்), மஹேந்திர சிங் தோனி (60 போட்டிகள்), சுவரவ் கங்குலி (49 போட்டிகள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

Kohli

ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் கோஹ்லிக்கு இந்த இறுதிப் போட்டியானது, ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பையை வெல்வதற்கான சிறந்த வழியாக இருப்பதால், இந்த இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை விராட் கோஹ்லி நிரூபிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement