செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்து அமெரிக்கா பிளைட்டில் பறந்த கோலி அண்ட் டீம் காரணம் இதுதான் – விவரம் இதோ

ravi-koli-3
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கலந்து கொண்டு விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

வழக்கமாக வெளிநாட்டு தொடருக்கு செல்லும் முன் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள். ஆனால் இந்த முறை கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பேட்டியை தவிர்த்து அணி வீரர்களுடன் அமெரிக்கா சென்றுவிட்டனர் இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி கூறியதாவது :

நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதனை செய்ய முடியவில்லை எனவே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க வில்லை என்று சமாளித்தார். ஆனால் அதன் உண்மையான காரணம் யாதெனில் கோலிக்கும், ரோஹித்துக்கு தற்போது பனிப்போர் நிலவி வருவதால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது யாரேனும் கோலி ரோகித் விவகாரம் குறித்து நிச்சயம் அதிக அளவு கேள்விகளை எழுப்ப வாய்ப்பிருந்தது.

Rohith

அதனால் கோலி கோபம் அடைய வாய்ப்பு உள்ளது. அப்படி கோபமடைந்து கோலி யாதாவது கருத்தினை கூறினால் அது இன்னும் பிரச்சனையை வளர்க்கும் விதமாக அமையும் என்பதால் இதனை தவிர்க்க செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் தவிர்த்து கோலி அணி வீரர்களுடன் அமெரிக்கா பறந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement