நான் ஸ்கூல் படிக்கும்போது கோடைவிடுமுறையை இப்படித்தான் கழிப்பேன் – விராட் கோலி கலகல பேட்டி

Kohli

இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் பெரிதாக சம்பாதித்த பின்னர் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் படிப்பதற்கு வசதி இல்லாத குழந்தைகள் என பலருக்கும் தனது விராட் கோலி பவுண்டேஷன் மூலம் உதவி செய்து வருகிறார். இது கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .

Kohli-4

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி இந்தியா முழுவதும் இருந்த தனது இளம் குட்டி குழந்தை ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினார். அதில் குறிப்பாக அவர்கள் கேட்கும் சுட்டித்தனமான கேள்விகள் அனைத்திற்கும் பதில் கொடுத்தார். மேலும், இந்த லாக்ட் அவுன் நேரத்தில் எவ்வாறு தன்னை மேம்படுத்திக் கொண்டார் எனவும் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் எனவும் பல டிப்ஸ்களை குழந்தைகளுக்கு கொடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சிறுவயதில் கோடை விடுமுறையை ஜாலியாக கழிப்பதையே விரும்புவேன். அதே நேரத்தில் எனது விடுமுறையின் 90 சதவீத விடுமுறையை எப்போதும் கிரிக்கெட் விளையாடிய கழித்து விடுவேன். மீதமுள்ள 10 சதவீத நேரத்தில் மற்ற விளையாட்டுகளை விளையாடுவேன். கிரிக்கெட் தவிர பேட்மிட்டன், கால்பந்து, கூடைப்பந்து இவை அனைத்தையும் விளையாடுவேன்.

kohli 2

அதுதவிர கார்ட்டூன் பார்ப்பது டிவி பார்ப்பது வீட்டுப் பாடங்கள் செய்வது என தினசரி வேலையை அன்றைய தினமே முடித்துவிடுவேன். தினமும் வீட்டுப்பாடம் செய்வது மிகவும் அவசியமான ஒன்று .ஏனென்றால் இறுதியாக ஹோம்வொர்க் முடிக்காமல் வைத்து விட்டால், நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவோம். கடைசி நேரத்தில் முழுமையாக அதனை முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்துவிடும் என்று கூறினார் விராட் கோலி.

- Advertisement -

மேலும் நான் எனது 12வது வயதில் ஜனவரி முதல் டிசம்பர் வரை பள்ளி நேரம் முடிந்த உடன் நேரடியாக கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுவிடுவேன். தேர்வு நடைபெறும் நாட்களிலும் கூட கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்வேன். எனது வழக்கமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆட துவங்கி விடுவேன். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் அயர்ச்சியாக இருக்கும். இதன்காரணமாக ஸ்கூல் பேக்கை வீசிவிட்டு குளித்துவிட்டு தரையில் படுத்துக் கொள்வேன். எனது கோடை விடுமுறையை மட்டும் என்னால் எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் விராட் கோலி.

Kohli-1

கோலியின் இந்த இளமை காலத்தை குறித்த பதில்களால் குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். மேலும் லாஃடவுன் முடிந்தவுடன் தான் எங்கிருந்து கிரிக்கெட்டை விட்டேனோ அங்கிருந்தோ தொடங்குவேன் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.