தோனியை பற்றி 2 வார்த்தையில சொல்லனும்னா அது இதுதான் – ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி

Kohli

இந்திய அணி அடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான 25 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 19ம் தேதி முதல் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

IND

ஏனெனில் இங்கிலாந்து இருக்க செல்லும் முன்னர் இந்திய வீரர்கள் 14 நாட்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னரே அவர்கள் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ கூறியுள்ளது. அதன்படி தற்போது தனிமைப்படுத்துதலில் இருக்கும் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர்.

- Advertisement -

இதனால் நேரத்தை கழிக்க என்ன செய்வது என்று தெரியாமல் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது, நேரலையில் உரையாடுவது என பல விடயங்களை செய்து வருகின்றனர் .அந்த வகையில் கடந்த 25ஆம் தேதி தனிமைப்படுத்துதல் இணைந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

Kohli

இந்த இன்ஸ்டாகிராம் கேள்விகளில் ஒரு ரசிகர் மகேந்திர சிங் தோனி குறித்து இரண்டே வார்த்தைகளில் பதில் அளியுங்கள் என்று கோலி இடம் கேட்டதற்கு அதற்கு விராட் கோலி “நம்பிக்கை மற்றும் மரியாதை” என தோனி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Kohli

ஏற்கனவே அஸ்வினுடன் நடந்த உரையாடலில் தோனிதான் இந்திய அணியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் என்றும் இன்று தான் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு தோனி தான் காரணம் என்றும் விராட்கோலி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement