முதல் நாள் போட்டியிலேயே முற்றிய மோதல் : கோலி மற்றும் ஸ்டோக்ஸ்க்கு இடையே நடந்தது என்ன ? – வைரலாகும் வீடியோ

Stokes

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சை தற்போது முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களை குவித்தனர்.

cup

இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றபோது மைதானம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

அதனால் 4-வது போட்டியிலும் மைதானம் குறித்த பிரச்சினையை இங்கிலாந்து வீரர்கள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் நாளிலேயே கோலி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடையே நடந்த பிரச்சனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்றைய போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்டோக்ஸ்க்கு எதிராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமத் சிராஜ் தொடர்ந்து பவுன்சர்களை வீசிக்கொண்டே இருந்தார். பின்பு பென் ஸ்டோக்ஸ்ஸிடம் சென்ற அவர் ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கோலியும் அவரிடம் சென்று ஏதோ பேச இருவருக்கும் வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியது.

- Advertisement -

stokes 1

இதனையடுத்து நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும் இந்த விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் கோலி தனது கூலிங் கிளாசை கழற்றி பென் ஸ்டோக்ஸ்ஸை முறைத்தபடி பார்த்ததும் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.